
VRV Movie Review : சிம்பு வந்தா ராஜாவாக தான் வருவேனு சொன்னபடி ராஜாவாக வந்தாரா? இல்லையா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு, ரோபோ ஷங்கர், பிரபு, ரம்யா கிருஷ்ணன், ராதா ரவி, நாசர் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவாக தான் வருவேன்.
கதைக்களம் :
பெரிய பிசினெஸ் மேனான நாசரின் மகள் ரம்யா கிருஷ்ணன். இவர் பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் நாசர் இவர்கள் இருவரையும் வீட்டை விட்டு விரட்டி வருகிறார்.
ஆனாலும் தன்னுடைய மகளின் மீதான பாசம் கொஞ்சமும் குறையவில்லை. இதனால் தன்னுடைய 80-வது பிறந்த நாள் கிப்ட்டாக தன்னுடைய மகளை பார்க்க வேண்டும். உன் அத்தையை எப்படியாவது கூட்டிட்டு வா என தன்னுடைய பேரனான சிம்புவிற்கு கட்டளையிடுகிறார்.
இதனால் சிம்பு தன்னுடைய அத்தையின் மனதை மாற்றுவதற்காக சென்னை வருகிறார். அதன் பின் சிம்புவின் தன் அத்தையின் மனதை மாற்ற என்னவெல்லாம் செய்கிறார்? ரம்யா கிருஷ்ணனின் மனதை மாற்றினாரா? இரு குடும்பமும் சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.
சிம்பு :
சிம்பு இப்படத்தில் மீண்டும் தன்னுடைய பழைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். காமெடி, காதல் கலாட்டா, ரொமான்ஸ், ஆக்ஷன் என அத்தனையிலும் அதிர வைத்துள்ளார்.
மஹத் :
இந்த படத்தில் குறைந்த காட்சிகள் தான் என்றாலும் தன்னுடைய ரோலை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா :
மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா என இருவருமே தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து கொடுத்து இந்த படத்திற்கு அழகு சேர்த்துள்ளனர்.
யோகி பாபு, ரோபோ ஷங்கர் :
யோகி பாபுவின் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பது உறுதி. அதே போல் ரோபோ ஷங்கரின் காமெடியும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளன.
இதர நடிகர், நடிகைகள் :
இதர நடிகர், நடிகர்களான ரம்யா கிருஷ்ணன், நாசர், பிரபு, ராதா ரவி என அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை அறிந்து கச்சிதமாக நடித்துள்ளனர்.
தொழில் நுட்பம் :
இசை :
ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரின் பின்னணி இசை, பாடல்கள் என அனைத்துமே ரசிகர்கள் கவரும் படியாக உள்ளது.
எடிட்டிங் & ஒளிப்பதிவு :
என்.பி ஸ்ரீகாந்தின் எடிட்டிங் படத்தை போர் இல்லமால் கொண்டு செல்கிறது. அதே போல் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
தம்ப்ஸ் அப் :
1. சிம்புவின் நடிப்பு, டான்ஸ் என அனைத்தும் சிறப்பு
2. கலகலப்பான திரைக்கதை
3. யோகி பாபு, ரோபோ ஷங்கரின் காமெடி
