VRV Celebration

VRV Celebration : டேன்ஸ் மாஸ்டர் ஒருவர் சிம்புவின் கட் அவுட்டிற்கு குடம் குடமாக பாலபிஷேகம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் வந்தா ராஜாவாக தான் வருவேன்.

ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் சிம்புவிற்கு ரசிகர்கள் இல்லை என கூறியவர்கள் எல்லாம் வாயடைத்து போகும் அளவிற்கு ரசிகர்களும் கொண்டாட்டங்களில் மாஸ் காட்டி வருகின்றனர்.

ரசிகர்களை போலவே டான்ஸ் மாஸ்டரான ராபர்ட்டும் குடம் குடமாக பாலபிஷேகம் செய்து வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தை கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதே போல் புதுவையில் உள்ள ரசிகர்கள் சிம்பு சொன்ன சொல்லை தட்டாமல் தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு பாலுடன் பிஸ்கட்களையும் கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here