Voter List
Voter List

Voter List :  ஈரோடு: ஈரோட்டில் வாக்காளர் பெயர் பட்டியலில் 11 இடங்களில் ஒரு வாக்காளர் பெயர் இடம் பெற்றிருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது அனைவரும் அறிந்ததே. இதற்கான வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி முனியப்பன் கோயில் வீதி வாக்காளர் பட்டியலில் ஒரே பெயர் 11 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

இதனை கண்ட அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ஒவ்வொரு பெயருக்கும் எதிரில் வரிசை எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் மட்டும் வெவ்வேறு எண்ணில் காணப்பட்டது.

வரிசை எண் 42-ல் இருந்து 51 வரை 11 இடங்களில் வாக்காளர் பெயர் ரகுபதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பெயர், தந்தை பெயர், முகவரி ஆகியவை ஒரே மாதிரி உள்ளது.

இருப்பினும், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் வரிசை எண் ஆகிய 2 எண்கள் மட்டும் மாறி மாறி உள்ளது.

இந்நிலையில் வெவ்வேறு எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு ஒரு நபரின் ஓட்டினை 11 பேர் வாக்களிக்க முடியும் என எதிர்க்கட்சியினரின் புகார் அளித்தனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணை தலைவர் பாஷா, தலைமை தேர்தல் அதிகாரி மற்றும்,

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோருக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

புகார் மனுவில், “ஒரே வாக்காளரின் பெயர் 11 இடங்களில் இடம் பெற்றிருப்பது குறித்தும்,

ஆனால் வரிசை எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவை மாறி இருப்பதை குறித்தும் புகார் அளித்து உள்ளனர்”.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.