Voter List Release Date for Election 2021

Voter List Release Date for Election 2021 : தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப் பொங்கல் வருகிறது. அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .அன்றைய தினம் தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மாநில அரசின் விடுமுறை தினமாகும்.

அதேசமயம் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும்.தமிழக அரசின் விடுமுறை தினத்தன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதாவது ஜனவரி1ஆம் பேபி அன்று 18 நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கு வசதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வரும் நவம்பர் 16-ஆம் தேதி வெளியிடப்படும்,

SHOCKING: 2021 சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் போட்டி? -ரகசியமாக நடந்த ஆலோசனை.!

வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு உரிய விண்ணப்பங்களை நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் பதினைந்தாம் தேதி வரை அளிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசோதனைகள் அனைத்தும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் முடிவடையும். அதன் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

எனவே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதியை தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்போ அல்லது பின்போ வெளியிட வேண்டும் என கோரிக்கை தொடங்கியுள்ளது.