VJS46 Heroine Update

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவருடைய 46வது படத்தில் நடிக்க இருப்பது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது‌.

VJS46 Heroine Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர், உப்பனா ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், துக்ளக் தர்பார் புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

மேலும் இவர் அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் உருவாக உள்ள விஜய் சேதுபதி 46 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தத் திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முன்னணி நடிகை யாராச்சும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அறிமுக நடிகை அனுகீர்த்தி வாஸ் என்பவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.