Vj Ramya Idea to Fan Girl

கணவனால் ஏற்பட்ட கொடுமை குறித்து லைவ் வீடியோ புலம்பிய ரசிகைக்கு ஐடியா கொடுத்துள்ளார் நடிகை ரம்யா.

Vj Ramya Idea to Fan Girl : தமிழ் சினிமாவின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே ரம்யா. இந்த கொரானா ஊரடங்கில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் ரசிகர்களுடன் லைவ் வீடியோவில் உரையாடியுள்ளார். அப்போது ரம்யா ரசிகர்களிடம் இந்த ஊரடங்கில் பொழுதைப் போக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் பலவிதமான விஷயங்களைக்கூட ரசிகை ஒருவர் தன்னுடைய கணவர் தன்னை தினமும் அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூற அவருக்கு ரம்யா அறிவுரை வழங்கியுள்ளார்.

உங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். நீங்கள் உங்கள் பெற்றோருடன் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் மனதில் பட்டதை யாருடனாவது ஷேர் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.