மனைவியுடன் தொகுப்பாளர் ரக்ஷன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
VJ Rakshan With Wife : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்கு வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷன்.
இதுநாள்வரை ரட்சன் சிங்கிள் தான் என ஒட்டுமொத்த ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை கூட உள்ளது என்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் தெரிய வந்தது.
அதன் பின்னர் ரக்ஷன் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது மனைவியுடன் காரில் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.