அர்ச்சனாவை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

VJ Priyanka in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்த நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதில் போட்டியாளராக யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

கிட்டத்தட்ட 90% கலந்து கொள்வது உறுதி என அறியப்பட்ட போட்டியாளர்களின் லிஸ்ட் நேற்று வெளியானது. அந்த லிஸ்டில் நடிகை சூசன் ஜார்ஜ், ஷகிலாவின் மகள் மிலா, சந்தோஷ் பிரதாப், கோபிநாத் ரவி, ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என தகவல் வெளியானது.

வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி : இன்று, அன்னை பிறந்த நாள் விழா

இவர்களைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள தகவலின்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நான் ரொம்ப லக்கி.., மகிழ்ச்சியில் வனிதா விஜயகுமார்..! | George Vijay Nelson | Kenny Shooting Spot HD