Vj Jaqquline About Kutty Ramesh Death

அப்பாவாக நடித்த குட்டி ரமேஷின் மரணம் தொடர்பாக உன்னை யாரும் பேட்டிக்கு அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Vj Jaqquline About Kutty Ramesh Death : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் தேன்மொழி பிஏ. விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ஜாக்குலின் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவருக்கு அப்பாவாக நடித்து வந்த குட்டி ரமேஷ் சில தினங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார்.

இவரது மறைவு சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தென்மொழி பிஏ சீரியலில் நடித்துவரும் பலரும் குட்டி ரமேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். ஜாக்குலின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன் அப்பா என கூறியுள்ளார். மேலும் எனக்கும் அப்பாவுக்கும் ராசி இல்லை என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குட்டி ரமேஷ் அவர்களின் மரணம் தொடர்பாக யாரும் வீட்டுக்கு அழைக்க வேண்டாம் எனவும் மீடியாக்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.