பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார்.

VJ Deepika About Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தீபிகா. தொகுப்பாளினியாக பயணத்தைத் தொடங்கிய இவர் சீரியல் நடிகையாக நடிக்க தொடங்கினார். ஆனால் தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

அது என் தப்பு இல்லையே... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியது ஏன்?? தீபிகா கொடுத்த விளக்கம் - ரசிகர்கள் ஷாக்.!!
உலக டென்னிஸ் தரவரிசை வெளியீடு : ஜோகோவிச், நடால் எத்தனையாவது இடம்?

அதன் பின்னர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இதுவும் கடந்து போகும் ஜில் தீப்பு என பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகுவதற்கான காரணம் என்ன என கூறியுள்ளார் தீபிகா.

முகத்தில் நிறைய முகப்பருக்கள் இருப்பதால் அதனை நீக்குவதற்கு நான் ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறேன். அதற்காக விஜய் டிவியில் எனக்கு கால அவகாசம் கொடுத்து இருந்தது. ஆனால் ட்ரீட்மெண்ட் முடிவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆனதால் இந்த சீரியலில் என்னால் தொடர முடியவில்லை. விரைவில் ட்ரீட்மென்ட் முடித்து ஐஸ்வர்யா போன்ற கதாபாத்திரத்தில் அல்லது ஹீரோயினியாக நடிக்க தொடங்குவேன் என கூறியுள்ளார்.

Vijaysethupathi படத்தின் கதையில் மாற்றங்கள் சொன்னாரா? – Director Deepak SunderRajan Opens Up

இதில் சமூக வலைதளப் பக்கங்களில் கூட போட்டோவை வெளியிட்டால் முகப்பரு நிறைந்திருக்கிறது நல்லாவே இல்லை என நிறையபேர் கமெண்ட் செய்திருக்கிறார்கள். முகப்பரு வருவதற்கு நான் என்ன செய்ய முடியும் என கூறியுள்ளார். மேலும் எனக்கு சரவணனுக்கும் இடையே நல்ல ஃப்ரெண்ட்ஷிப் தான் உள்ளது காதல் இல்லை என கூறியுள்ளார்.

இருவரும் செட்டில் அமர்ந்து கான்செப்ட் குறித்து யோசிப்போம். ஆனால் இனி அது முடியாது என்பதால் இருவரும் சேர்ந்து ஒரு ஆபீஸ் செட் அமைத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.