சித்ரா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஹேம்நாத் இன்று விடுதலையாகியுள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி தன் திறமையால் சீரியல் மூலம் பிரபலமானவர் வி.ஜே சித்ரா. இவர் ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்ததாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் என்று தகவலும் வெளியானது.
ஆனால் கடந்த 2020-இல் டிசம்பர் ஒன்பதாம் தேதி தனியார் ஹோட்டல் ஒன்றில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தி அவரின் குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அவருடன் ஹேம்நாத் இருந்ததாக தகவலும் வெளியானது.
சித்ராவின் அம்மா தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று வழக்குப்பதிவு செய்து இருந்தார். நான்கு வருடமாக நடந்த இந்த வழக்கு இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட ஹேம்நாத்துக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் ஹேமநாத்தை விடுதலை செய்வதாகவும் நீதிபதி அறிவித்திருக்கிறார்.
சித்ரா இறுதியாக நடித்த கால்ஸ் படம் வெளியாகும் முன்னரே அவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.