VJ Chithu Birthday Celebration

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு அவரது பெற்றோர்கள் கேக் ஊட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

VJ Chithu Birthday Celebration : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பின்னர் சின்னத்திரை நடிகையாக வெற்றிகண்டவர் விஜே சித்ரா. மேலும் இவர் வெள்ளித்திரையில் கால்ஸ் என்ற படத்தில் கூட நாயகியாக நடித்திருந்தார். ஆனால் இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இன்று வரை அவரது இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரது ரசிகர்கள் கண் கலங்கி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சித்ராவின் பிறந்த நாள் என்பதால் அவர்களுடைய பெற்றோர்கள் பழங்கள் மற்றும் கேக் வாங்கி வைத்து வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

சித்ராவின் போட்டோவிற்கு அவரது தந்தை கேக்கை ஊட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. இவ்வளவு சீக்கிரம் விட்டுட்டு போயிட்டியே சித்ரா என அவரது ரசிகர்கள் கண் கலங்கி கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர்.