VJ Chithra in Last Show Video

சித்ராவின் கடைசி தருணம் இதுதான் என விஜய் டிவி வெளியிட்ட வீடியோ கால் ரசிகர்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.

VJ Chithra in Last Show Video : விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவர் கடந்த வாரம் மனவுளைச்சல் காரணமாக ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் தற்கொலை முடிவை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் தற்கொலை செய்து கொண்ட அன்று இரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கை தான் முடித்துவிட்டு வந்தார்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி சித்ரா பங்கேற்ற அந்த நிகழ்ச்சியின் கடைசி தருணம் இது தான் என வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இதனால் சித்ராவின் ரசிகர்கள் கண் கலங்கி உள்ளனர். இதற்கு முன்னதாக உடல்நல குறைபாட்டால் உயிரிழந்த வடிவேல் பாலாஜி அவர்களின் இறுதியாக இதே ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார் என்பதையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.