ராஜா ராணி அர்ச்சனா வெளியிட்ட வீடியோ இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் காமெடி கலந்த வில்லியாக நடித்து வந்தவர் அர்ச்சனா. சந்தியாவுக்கும் இவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

ராஜா ராணி அர்ச்சனாவா இது?? சீரியலை விட்டு வெளியேறுவது எப்படி மாறிட்டாங்க பாருங்க - வைரலாகும் வீடியோ

ஆனால் திடீரென இவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதன் காரணத்தினால் தான் இந்த சீரியலில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ராஜா ராணி அர்ச்சனாவா இது?? சீரியலை விட்டு வெளியேறுவது எப்படி மாறிட்டாங்க பாருங்க - வைரலாகும் வீடியோ

இப்படியான நிலையில் தற்போது அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏஞ்சல் போன்ற கெட்டப்பில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை பெரிதாக கவர்ந்து வருகிறது. அர்ச்சனாவா இது அடடா எவ்வளவு அழகா இருக்காங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.