தொகுப்பாளினி அஞ்சனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அஞ்சனா தொடர்ந்து பல்வேறு புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆனால் திடீரென்று கையில் மாவு கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆபரேஷன் செய்யப் போவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீட்டில் இருக்கும் போது தவறி விழுந்து அடிபட்டுள்ளது.
இந்த வீடியோ வெளியானதால் பலரும் அஞ்சனாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.