தொண்ணூறுகளில் ஃபேவரைட் தொகுப்பாளராக வலம் அந்த ஆனந்த கண்ணன் மரணமடைந்துள்ளார்.

VJ Ananda Kannan Passes Away : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆனந்த கண்ணன். அதுமட்டுமல்லாமல் சிந்துபாத் சீரியல் மற்றும் படங்களிலும் இவர் நடித்து இருப்பார்.

சன் டிவியில் இருந்து விலகிய பின்னர் இவர் என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தன. அவ்வப்போது இவருடைய சில புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் வெளியான வண்ணம் இருந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன் தற்போது மரணமடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.