ரோஜா சீரியல் நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

VJ Akshara Admitted in Hospital : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ரோஜா. இந்த சீரியலில் ப்ரியங்கா நாயகியாக நடிக்க அவருக்கு வில்லியாக விஜே அக்ஷரா நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் ஷாமிலி சுகுமார் நடித்தார் அவர் கர்ப்பமாக இருப்பதன் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.

வில்லியாக நடித்து வரும் அக்ஷராவுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.