Vivekh Challange to Ajith
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தும் விவேக் தல அஜித்திற்கு சவால் விட்டுள்ளார்.

Vivekh Challenge to Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் விவேக், இவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்திருந்த தாராள பிரபு திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரஜினி முதல்வராக கூடாது என கூறிய பாரதி ராஜா.. தற்போது வெளியிட்ட அதிரடி அறிக்கை.!

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக விவேக்கும் நிறைய பேட்டிகளை கொடுத்து வந்தார். அப்படியான பேட்டி ஒன்றில் முன்னணி நடிகர்களில் ஒருவருக்கு சவால் விட வேண்டும் என்றால் யாருக்கு விடுவீர்கள்? என்ன சவால் விடுவீர்கள்? என கேட்டுள்ளனர்.

அதற்கு விவேக், தல அஜித்துக்கு தான் சவால் விடுவேன் என கூறியுள்ளார். மேலும் அது என்ன சவால் என கேட்டதற்கு தல அஜித் அவருடைய ரசிகர்களை முடிந்த அளவிற்கு மரம் நட சொல்லுவேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.