Vivek Wishes to Ajith

அஜித் எப்போதும் வித்தியாசமானவர் தான் என வித்தியாசமாக வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் விவேக்.

Vivek Wishes to Ajith : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். அமராவதி என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் பல தோல்விகளைக் கடந்து இன்று உச்ச நடிகராக இடம்பிடித்துள்ளார். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையை மட்டுமே நம்பி என்ற இடத்தை பெற்றள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், சிறு வகையான ட்ரோன் வடிவமைத்தல் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார். சமீபத்தில்கூட துப்பாக்கி சுடுதலில் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனால் அரசியல் தலைவர்கள் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். திரையுலக பிரபலங்களும் தல அஜித்தின் திறமையை பாராட்டி பதிவு செய்து வந்தனர். இப்படியான நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் நடிகர் விவேக்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இது குறித்த பதிவில் துணை முதல்வர், சீமான், காங்கிரஸ், பாஜக, திமுக பிரமுகர்கள் மற்றும் பல திரைப்பட நடிகர்கள் தல அஜித் துப்பாக்கி சுடுதலில் 6 தங்கம் வென்று சாதனை படைத்ததற்கு பாராட்டி பதிவு செய்கிறார்கள், அஜித் உங்கள் நண்பர் நீங்கள் ஏன் பதிவிடவில்லை சார்? என கேள்வி எழுப்ப அதற்கு விவேக் பதிலளித்துள்ளார். அந்த பதிவில் நான் வட இந்தியாவில் படபிடிப்பில் உள்ளேன். தாமதமாக தெரிந்து கொண்டேன். அஜீத் எப்போதும் வித்தியாசமானவர் தான். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.