
தமிழ் சினிமாவின் இன்று மிக பெரிய நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் விஜய். இவர்கள் இருவருக்கும் தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதில் இருந்தும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.
அதே போல் காமெடி நடிகரான விவேக் அவர்கள் அஜித், விஜய் என இருவருடனும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் அவர்களை பற்றி பேசி வருகிறார்.
அதே போல் நேற்று நடந்த பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டு அஜித், விஜயை பற்றி பேசியுள்ளார்.
அஜித், விஜய் இரண்டு பேருமே மாஸ் தான். ஒரு முறை உங்களுக்கு எப்படி இவ்ளோ பேன்ஸ் இருக்காங்க என கேட்டதற்கு Don’t Know என கூறியதாக அஜித் குரலில் பேசி அசத்தியுள்ளார்.