Vivek Prasanna joins Amala Paul's Aadai : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Amala

Vivek Prasanna joins Amala Paul’s Aadai :

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அடுத்து வந்த மைனா இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இதைதொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலாபால் 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

பின்னர் விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்துக்குப் பின்பும் ஹீரோயினாகவே நடித்து வெற்றி பெற்றார்.

அசுரனில் விஜய் சேதுபதி? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!

இதில் இவர் நடிக்கும் ஆடை படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் விவேக் பிரசன்னா இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவர் மேயாத மான் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் கௌரி எனும் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.