
Vijay 63 : தளபதி 63 படத்தில் பிரபல காமெடி நடிகரான விவேக் இணைந்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் சர்கார் படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் ஹாட்ரிக் ஹிட் கொடுக்க மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஏ.எல் ரூபன் எடிட்டிங், என தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தில் நடிகர் விவேக்கும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விவேக் கலந்து கொண்ட போது இது உண்மை தானா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு விவேக் சத்தியமாக விஜயுடன் இணைந்து தளபதி 63 படத்தில் நான் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.
அவர் இவ்வாறு பேசியுள்ள வீடியோவை தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.
தளபதி விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும்.. #தளபதி63 படத்தில் நான் நடிக்கிறேன்-நடிகர் விவேக் pic.twitter.com/h91z74siU3
— அவதார் (@avardhaar) November 16, 2018