Vivek Friendship With Ajith
Vivek Friendship With Ajith

அடிபட்டு அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது 48 நாட்கள் விரதம் இருந்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Vivek Friendship With Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் நல்ல நட்பு கொண்டிருப்பவர். அஜித்தைப் பற்றி புகழாத பிரபலங்களே இல்லை.

ஷாலினியை திருமணம் செய்வதற்கு முன்பாகவே பிரபல நடிகையை பெண் கேட்டு சென்றாரா அஜித்?? முதல் முறையாக வெளியான ஷாக்கிங் தகவல்!

ஒருமுறை தல அஜித் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் கூடிய விரைவில் நலம் பெற வேண்டுமென 48 நாட்கள் விரதமிருந்து உள்ளார் நடிகர் விவேக்.

ஆனால் இது குறித்து அவர் எப்போதும் எந்த இடத்திலும் பேசியதில்லை. இதனை எப்படியோ அறிந்த பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் நடிகர் விவேக்கிற்கு நன்றி கூறி வருகின்றனர். நட்புனா இது தான் நட்பு என புகழ்கின்றனர்.