Vivek Anand Oberoi Shared Controversy Mems about Aishwarya Raai | Vivek Oberoi | Thala Ajth | Vivegam | Vivegam Villian | Kollywood News

ஐஸ்வர்யா ராயை அசிங்கமாக சித்தரித்து அதனை தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் அஜித் பட வில்லன்.

Vivek Anand Oberoi : தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தவர் விவேக் ஓப்ராய்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான இவர் சமீபத்தில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என கமல்ஹாசன் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இவரே தற்போது ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்த மீம்ஸ் ஒன்றை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது ஐஸ்வர்யா ராய் ஆரம்பத்தில் சல்மான் கானை காதலித்ததும் அதன் பின்னர் விவேக் ஓப்ராயுடன் கிசுகிசுக்கப்பட்டது, அதன் பின்னர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டதையெல்லாம் வைத்து மீம் உருவாக்கப்பட்டு அதனை தேர்தல் கருத்து கணிப்பு மற்றும் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டுள்ளனர்.

இதனை ஷேர் செய்த விவேக் ஓப்ராயை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அவர் அந்த மீமில் தவறு ஏதும் இல்லை, மன்னிப்பு கேட்க முடியாது எனவும் கூறி வருகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.