Viswasam Vijay

Viswasam Vs Vijay : விஸ்வாசத்தில் தல அஜித் மறைமுகமாக தளபதி விஜயை பற்றி பேசி இருப்பதாக சமூக வளையதளங்களில் பேசி வருகின்றனர்.

தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம். நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் தற்போது சமூக வளையதளங்களில் விஸ்வாசம் படத்தில் அஜித் விஜயை பற்றி தான் பேசினார் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வளவோ படம் நடிச்சாலும் விஸ்வாசம் தான் ஸ்பெஷல் – யோகி பாபு ட்வீட்.!

அதாவது சண்டை காட்சி ஒன்றில் அஜித் தன்னுடைய மக்களிடம் அப்பா எத்தனை போட்டிகளில் ஜெயித்து இருக்கேன் தெரியுமா என கேட்பார்.

அதற்கு அவரது மகள் 62 என கூறுவார். இது தான் இந்த வாக்குவாதத்திற்கு காரணம். இதுவரை விஜய் 62 படங்களில் நடித்துள்ளார் என்பது தான் அப்படி கூறுகிறார் என கூறி வருகின்றனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் 62 என்ற எண்ணை குறிப்பிட்டு கூறியது கூட குத்தமா? என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.