
Viswasam Vs Petta Movie : தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவால் போன்களில் பேட்ட படமும் விஸ்வாசம் படமும் மோதுவது உறுதியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இம்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும் மோத இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தியேட்டர் பிரச்சனையாலும் தயாரிப்பாளர் சங்கத்தின் விதிமுறைகளாலும் இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒன்று விலகி கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற விழாக்காலங்களில் படங்களை வெளியிட எந்த நிபந்தனையும் இல்லை.
படத்தின் தயாரிப்பாளர்களின் விருப்பப்படி படங்களை வெளியிட்டு கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் பொங்கல் ரேஸில் இன்னும் பல சிறிய பட்ஜெட் படங்களும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.