Viswasam Vs Petta

Viswasam Vs Petta Movie : விஸ்வாசம் படத்திற்காக தியேட்டர்களை பிடிக்கும் பணிகள் தற்போதில் இருந்தே தொடங்கி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள பேட்ட, சிம்பு சுந்தர் சி இயக்கத்தில் நடித்துள்ள வந்தா ராஜாவாக தான் வருவேன் ஆகிய படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தை வெளியிட உள்ள KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

தற்போது வரை தமிழகத்தில் சுமார் 70% அதிகமான தியேட்டர்களை பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. அதுவும் பட ரிலீசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பில் இருந்தே தியேட்டர்களை புக் செய்து விட்டார்களாம்.

இதனால் மீதமுள்ள 30% தியேட்டர்களில் பேட்ட படத்திற்கும் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்திற்கு எத்தனை தியேட்டர் கிடைக்கும்.

குறைவான தியேட்டர்கள் கிடைத்தாலும் படத்தை ரிலீஸ் செய்வார்களா? அல்லது படத்தின் ரிலீஸ் தள்ளி போகுமா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.