Viswasam Vs Bigil Connection : Are you Note This in Announcement? | Thala Ajith | Thalapathy Vijay | Kollywood Cinema | Tamil Cinema News
விஸ்வாசம் பட பாணியில் பிகில் படக்குழு களமிறங்கியுள்ளது. இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

Viswasam Vs Bigil Connection : தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என்றாலும் தொழில் என வரும் போது நிச்சயம் கடும் போட்டி இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று.

அதே போல் அடுத்ததடுத்து வெளியாகும் இவர்களின் படங்களுக்கும் நிச்சயம் எதாவது ஒரு கனெக்ஷன் இருக்கும். எடுத்துக்காட்டாக அஜித் தெறிக்க விடலாமா என டைலாக் பேச விஜயின் அடுத்த படத்தின் டைட்டில் தெறி என அமைந்தது.

இது போன்ற சம்பவங்கள் எதார்ச்சையாக நடக்கிறதா? இல்லை படத்தின் எதிர்பார்ப்புகளை எகிற வைக்க நடக்கிறதாம் என்பதெல்லாம் புரியாதா புதிர் தான்.

அபிராமியின் பெயரை அஜித் படம் மாற்றும் – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி.!

இறுதியாக வெளியான அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்றிருந்த கண்ணான கண்ணே  என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடல் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்காக பாடுவது போலா அமைந்த்திருந்தது.

தற்போது இந்த பாடலை போலவே மகள்களுக்காகவே பிகிலில் சிங்க பெண்ணே என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடலை தமிழகம் முழுவதும் உள்ள மகள்களுக்காக டெடிகேட் செய்வதாக படக்குழுவும் அறிவித்திருந்தது.

இதனால் மூலம் விஸ்வாசம் படத்திற்கும் பிகில் படத்திற்கும் இடையேயும் ஒரு கனெக்ஷன் இருப்பது உறுதியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.