Viswasam Villian

Viswasam Villian : விஸ்வாசம் படத்தின் வில்லன் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது, ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

தல ரசிகர்கள் பலரும் தற்போது விஸ்வாசம் படத்திற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்களில் சில குறைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறையாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்றிரவு வெளியாகி விஸ்வாசம் மோஷன் போஸ்டர் வேற லெவலில் இருந்ததால் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

தல பொங்கலுக்காக வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தூக்கு துரையின் அளப்பறைகளை ஆராவாரத்துடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வில்லன் குறித்த தகவலும் கிடைத்துள்ளது. அவர் யார் என்றால் விஜயுடன் பைரவா படத்தில் வில்லனாக நடித்திருந்த ஜெகபதி பாபு தான் என கூறப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன என்பதை படக்குழுவினரின் அறிவிப்பு வந்தால் தான் உறுதியாக தெரிய வரும்.

Jagathy Babu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.