Viswasam
Viswasam

Viswasam : விவேகம் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம் படம் அமைந்தது.

விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு அஜித் களமிறங்குவதாலும் மேலும் அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறை இணைந்திருப்பதாலும் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!

அதை முழுவதுமாக பூர்த்தி செய்ததால் படம் தாறுமாறு வெற்றியை பெற்றது.

உலகளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் எனும் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியது.

இந்நிலையில் நேற்று விஸ்வாசம் 100-வது நாளை தல ரசிகர்கள் வழக்கம்போல இணையத்தில் விமரிசையாக கொண்டாடினர்.

இதன் உச்சமாக அமைந்தது சிவாவின் டிவீட். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக டிவீட் தட்டிய சிவா, “தல ரசிகர்களுக்கும் தல அஜித் சாருக்கும் மிகுந்த நன்றி” என்றார்.

மேலும் சினிமா காதலர்களுக்கு தன்னை ஆதரவளித்த குடும்பத்தினருக்கு என சிவா உருக்கமாக எல்லோருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.