Viswasam Updates

Viswasam Updates Details : விஸ்வாசம் படத்தின் அப்டேட் இன்று வெளியாக இருந்த நிலையில் திடீரென படக்குழுவினர் எடுத்த முடிவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார். நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, ரமேஷ் திலக், கோவை சரளா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் புதிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது விஸ்வாசம் அப்டேட்டை வெளியிடுவதில் இருந்து படக்குழுவினர் பின் வாங்கியுள்ளனர்.

அதாவது கஜா புயல் பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் விஸ்வாசம் அப்டேட் வெளியாகுவது சரியாக இருக்காது என்பதால் படக்குழுவினர் விஸ்வாசம் படத்தின் அப்டேட்டினை வெளியிடுவதை தள்ளி வைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.