Viswasam Breaking Updates

Viswasam Breaking Update : இன்று தல ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் ஒன்று காத்துக் கொண்டு இருப்பதாக தியேட்டர் உரிமையாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் அப்டேட், டீஸர், ட்ரைலர், சிங்கிள் டிராக் என இவைகளில் ஏதாவது வெளியாகாதா என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகினி தியேட்டர் உரிமையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் இன்று தல ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் காத்திருப்பதாக கூறியுள்ளார், இதனால் அந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் சென்சார் போர்டில் உள்ளவர்களில் ஒருவரான உமைர் சாந்து நேற்று விஸ்வாசம் டீசருக்காக தேதி உறுதியாகி விட்டது என பதிவிட்டு இருந்தார்.

இதனால் விஸ்வாசம் படத்தின் டீஸர் இன்று வெளியாகலாம் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

அதுவும் இன்று வியாழக் கிழமை என்பதால் நிச்சயம் ஏதாவதொரு அப்டேட் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.