Viswasam TRP Record in Kannada
Viswasam TRP Record in Kannada

கர்நாடகாவில் TRP கிங்காக தல அஜித் உருவெடுத்துள்ளார். இவரே விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

Viswasam TRP Record in Kannada : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தின் முதல் பாதி தூக்கு துறையின் காமெடி, கலாட்டா என நினைவலையில் குத்தாட்டம் போட வைத்தது.

இரண்டாம் பாதி முழுவதும் அப்பா மகள் சென்டிமென்ட் மனைவியின் மீதான பாசம் என அனைவரையும் சென்டிமென்டில் கண்ணீர் சிந்த வைத்தது.

விஸ்வாசம் திரைப்படத்தால் எழுந்த பெரும் சந்தேகம், முக்கிய பிரபலத்தின் அதிரடி பதிவு – தெறிக்க விட்டு கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

இப்படம் கன்னட மொழியில் ஜாகமல்லா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஏற்கனவே இப்படம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது டிஆர்பியில் மாபெரும் சாதனை படைத்தது.

இந்த நிலையில் தற்போது உதயா தொலைக்காட்சியில் இரண்டாவது முறையாக ஒளிபரப்பப்பட்டு உள்ளது. தற்போது இப்படத்தை 58 லட்சத்து 97 ஆயிரம் பேர் பார்த்து ரசித்து இருப்பதாக BARC நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் உதயா தொலைக்காட்சி சேனல் கன்னட சின்னத்திரையில் TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

இதனை அஜித் ரசிகர்கள் தற்போது உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கர்நாடகாவும் தல அஜித்தின் சாம்ராஜ்யம் தான் என பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.