Viswasam Trailer

Thalapathy 63 Team : விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் பற்றி தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் அதிரடியாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் நேற்று மதியம் இணையத்தில் வெளியாகி 1 கோடி பார்வையாளர்களை கடந்து புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.

இதனால் தல ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் இது குறித்த விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரைலர் செம.. இந்த பொங்கல் மாஸான விஸ்வாசம் பொங்கல் என ட்வீட் செய்துள்ளார்.

விஜய் பட தயாரிப்பாளர் விஸ்வாசம் படத்தை பாராட்டி ட்வீட் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.