Viswasam Thiruvizha

Viswasam Thiruvizha : தல அஜித் விஸ்வாசம் திருவிழா அடுத்த வாரம் முதலே தொடங்க வாய்ப்பு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக விஸ்வாசம் படத்திற்காக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

அஜித்துக்கு ஜோடியாக நயந்தாரா நடித்துள்ள இந்த படத்தில் தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக், கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் பொங்கல் முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தை பற்றிய சூப்பர் தகவல்கள் கிடைத்துள்ளன. அது என்னவென்றால் பட ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன.

இதனால் அடுத்த வாரம் முதலே விஸ்வாசம் திருவிழா தொடங்கும் என கூறப்படுகிறது. அதாவது இப்படத்தின் மோஷன் போஸ்டர் அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் சிங்கிள் டிராக் ஒன்றும் அதனை தொடர்ந்து படத்தின் டீஸர், பாடல்கள், ட்ரைலர் என ஒவ்வொன்றாக வெளியிட படக்குழுவினர் திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.

இவைகளை ஒவ்வொன்றாக வெளியிட வேண்டுமென்றால் நிச்சயம் இரண்டு மாதங்களாவது தேவைபடும் என்பதால் அடுத்த வாரம் முதலே விஸ்வாசம் திருவிழா ஆரம்பமாகி விடும் என தகவல்கள் கசிந்துள்ளன.

அப்புறம் என்ன ரசிகர்களே விஸ்வாசம் திருவிழாவை கொண்டாட ரெடியா?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.