Viswasam

Viswasam Theater : பொங்கலுக்கு எங்களது தியேட்டரில் விஸ்வாசம் படத்தை திரையிட முடியாது என பிரபல திரையரங்கம் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள விஸ்வாசம் படம் எந்தெந்த தியேட்டர்களில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது பவானியில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான விஜயன் சினிமாஸ் நிறுவனம் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படத்தை திரையிட முடியாது.

அசல் படத்திற்கு பிறகு தற்போது அஜித் படத்தை தவற விட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

அடுத்த படத்தை நிச்சயம் திரையிடுவோம் என குறிப்பிட்டுள்ளனர். இந்த தியேட்டரில் பேட்ட படம் ரிலீசாக இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.