Viswasam Teaser Release

Viswasam Teaser Release : விஸ்வாசம் டீஸர் ரிலீஸ் தேதியில் திடீரென மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான அஜித் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து தொடர்ச்சியாக நான்காவது முறையாக கூட்டணி அமைத்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் ட்ரைலருக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இப்படத்தின் ட்ரைலர் புத்தாண்டு ட்ரீட்டாக ஜனவரி 1-ம் தேதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல் படி படக்குழு இந்த படத்தின் டீசரை வரும் டிசம்பர் 30 அல்லது 31-ம் தேதி மாலையில் வெளியிட திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தாலும் வரலாம். வரவில்லை என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எப்போது டீஸர் வந்தாலும் வேற லெவலில் சாதனை படைக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here