Viswasam Team

Viswasam Team : விஸ்வாசம் படத்தின் டீம் மீண்டும் இணைந்துள்ளது. அந்த புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இன்று வரை தியேட்டர்களில் இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

வசூலிலும் மரண மாஸ் காட்டி அனைத்து தரப்பினருக்கும் படு லாபத்தை கொடுத்து வருகிறது. பாகுபலி 2 படத்திற்கு பிறகு அதிக ஷேர் கொடுத்த திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் டீம் மீண்டும் இணைந்துள்ள புகைப்படம் சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளது.

அதாவது, படத்தின் இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன், கலை இயக்குனர் மிலன் ஆகியோர் மீண்டும் இணைந்து விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட்டில் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் வெற்றி தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் ஷேர் செய்ய அது தற்போது வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.