Viswasam Surprise

Viswasam Surprise : யாருமே எதிர்பாராத சர்ப்ரைஸை விஸ்வாசம் செகண்ட் லுக் போஸ்டரில் கொடுத்திருப்பதாக தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் இணைந்து விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். மேலும் முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த போஸ்டரில் தல அஜித் பைக்கில் போஸ் கொடுத்து இருந்தார்.

மேலும் அஜித் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்து இருந்தது.

இதனால் தற்போது அடங்காத அஜித் குரூப் என்ற குழுவை சேர்ந்த ரசிகர்கள் மதுரை, தேவகோட்டை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஹெல்மெட் அணிவது பற்றிய விழிப்புணர்வு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அடங்காத அஜித் குரூப் ரசிகர்களின் இந்த முடிவு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. பலரும் தல அஜித்தையும் பாராட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.