Viswasam

Viswasam :

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் தான் என ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அவர் சொல்லும் விசயங்களை பார்க்கும் அதுவும் ஒரு காரணமாகவே தோன்றுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தை ரசிகர்கள் பலரும் குடும்பம் குடும்பமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் அஜித், சிவா கூட்டணியில் வெளியான வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் மற்றவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற தீய காட்சிகள் இடம் பெறவில்லை.

விஸ்வாசம் படத்திலும் இதையே சிவா பின்பற்றி இருந்தார். எனவே விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் தான் என அந்த ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.