Viswasam Special Update

Viswasam Special Update : தளபதி விஜய்யின் சர்கார் பட கொண்டாட்டத்திற்கு இடையில் தல அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தின் அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.

முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம் உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. அதற்கு சாட்சி முதல் நாள் வசூல் நிலவரமே.

இந்த கொண்டாட்டத்திற்கு இடையில் விசுவாசம் படத்தின் அசத்தலான பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் வரும் நவம்பர் எட்டாம் தேதியோடு இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைய உள்ளதாம்.

ஒரு சில சண்டை காட்சிகள் மட்டும் முக்கிய இடங்களில் படமாக்க பட உள்ளதாம். அதன் பின்னர் பட ரிலீசுக்காக வேலைகளில் படக்குழு இறங்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

ஏற்கனவே இப்படத்திற்கான டப்பிங் வேலைகள் முழுமையாக முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்கள் தல ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here