Viswasam Special Update

Viswasam Special Update : விசுவாசத்தில் இடம் பெற்றுள்ள அடிச்சு தூக்கு பாடலை விட செம மாஸான ட்ரீட் ஒன்று ரசிகர்களுக்கு காத்திருப்பதாக பாடலாசிரியர் விவேகா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து அடிச்சு தூக்கு என்ற சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இதுவரை இப்பாடல் யு ட்யூபில் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றள்ளது.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தில் பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஸ்வாசம் படகில் ஒரு மெலடி பாடல் உள்ளது.

அது தான் இன்னும் செம ஹிட்டடிக்கும் என கூறி எதிர்பார்ப்பால் ரசிகர்களின் பல்ஸை எகிற விட்டுள்ளார்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள அடிச்சு தூக்கு பாடலை தொடர்ந்து ஓப்பனிங் சாங்கான வேட்டி கட்டு பாடல் தான் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.