Viswasam Siva : விஸ்வாசம் படத்தின் ரஜினியையும் விஜயையும் தாக்கும் வகையில் வசனம் இருந்ததாக எழுந்த சர்ச்சைகளுக்கு இயக்குனர் சிவா தற்போது பதிலளித்துள்ளார்.
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் விஸ்வாசம்.
தற்போது வரை பல தியேட்டர்களில் காட்சிகள் ஹவுஸ் புல்லாக சென்று கொண்டிருக்கின்றது.
மேலும் இந்த படத்தில் ஒரு இடத்தில் அஜித்துக்கும் அவரது மகளாக நடித்த அனிகாவுக்கும் இடையேயான உரையாடலில் 62 என்ற வார்த்தை இடம் பெறும்.
அதே போல் பொண்டாட்டி, பொண்ணு என அஜித் தன்னுடைய விலாசத்தை கூறும் வசனம் இடம் பெறும்.
இந்த காட்சிகள் விஜய் மற்றும் ரஜினியை தாக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கூறி வந்தனர்.
இந்நிலையில் தற்போது இது குறித்து சிறுத்தை சிவா அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயையும் ரஜினியையும் தாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.
அவை அனைத்தும் தற்செயலாக நடந்தது தான் என விளக்கமளித்துள்ளார்.