
Viswasam Secrets : விஸ்வாசம் படத்தில் தல அஜித்துக்கு மனைவியாக நடித்துள்ள நயன்தாரா ஷாலினியாகவே மாறியுள்ளார். இது நயன்தாராவே அஜித்திடம் சில விசயங்களை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ச்சியாக 4-வது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சிவா நயன்தாராவை சந்தித்து படத்தின் கதையை கூறியுள்ளார். கதையை கேட்ட நயன்தாரா அதன் பின்னர் அஜித்து போன் செய்துள்ளார்.
அப்போது விஸ்வாசம் படத்தின் கதையை கேட்கும் போது உங்களுக்கும் ஷாலினிக்கும் இருக்கும் உறவு தான் நினைவிற்கு வருகிறது என கூறியுள்ளார்.
அதற்கு தல அஜித் மனைவி ஷாலினியை நினைவில் வைத்து தான் என்னுடைய இந்த கதாபாத்திரமே உருவாக்கபட்டது என பதிலளித்துள்ளார்.