Viswasam Secrets

Viswasam Secret Cast : விஸ்வாசம் படத்தில் 3 மெகா ஸ்டார்கள் நடித்திருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் ரகசியமாகவே வைத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இவர்களை தாண்டி இப்படத்தில் நடிகர் சத்யராஜ், பிரபு மற்றும் ராஜ் கிரண் நடித்திருப்பதாக விக்கிபீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், படக்குழுவினர் இதுவரை இவர்களை பற்றிய அப்டேட்களையோ, புகைப்படங்களையே வெளியிடவில்லை.

இதனால் இவர்கள் மூவரும் நடித்திருப்பதை ரகசியமாக வைத்துள்ளார்களா? அல்லது விக்கி பீடியாவில் தவறாக பதிவிட்டுள்ளார்களா? என்பது தெரியவில்லை.

இதற்கான சரியான விளக்கத்தை படக்குழு தான் அளிக்க வேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Viswasam Secret Cast

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.