Viswasam Second Look

Viswasam Second Look: விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க டி.இம்மான் இசையமைத்து வருகிறார்.

ஏற்கனவே வெளியாகி இருந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் குறித்த தகவலை அஜித்தின் செய்தி தொடர்பாளராக சுரேஷ் சந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதாவது நாளை காலை 10.30 மணிக்கு இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இப்படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து ஒளிப்பதிவாளர் வெற்றி ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.