Viswasam Running Time

Viswasam Running Time : விஸ்வாசம் படத்தின் சென்சார் குறித்த தகவலை அறிவித்த நேரத்தை வைத்து ரசிகர் ஒருவர் ரன்னிங் டைம் குறித்த கேள்வி நெட்டிசன்களை எப்பா சாமி எப்படியெல்லாம் யோசிக்கறாங்க என பேச வைத்துள்ளது.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் சென்சார் நேற்று முடிவடைந்து படத்திற்கு கிளீன் U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர்.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட நேரத்தை வைத்து படத்தின் ரன் டைம் இது தானா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது இந்த அறிவிப்பை 2.24 மணிக்கு வெளியிட அப்போ படத்தின் ரன்னிங் டைமும் 2 மணி 24 நிமிடமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க பா என கமெண்டடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.