Viswasam

Viswasam Running Time : விஸ்வாசம் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி சூப்பரான வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை யூ ட்யூபில் 18 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மலேசியாவில் இந்த படத்தை வாங்கியுள்ள DmyCreation நிறுவனம் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 32 நிமிடம் என அறிவித்து ட்வீட் செய்துள்ளது.

இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.