Viswasam Release Date

Viswasam Release Update : விஸ்வாசம் படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்த நிறுவனம் அஜித்துடன் இணைவது இதுவே முதல் முறை என டீவீட்டியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழகத்தில் KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை ப்ரைம் மீடியா என்ற படத்தை வெளியிட உள்ளது.

இந்த நிறுவனம் தற்போது விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்வது குறித்து ட்வீட் செய்துள்ளது.

அந்த டீவீட்டில் தல அஜித்துடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறையை என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த பயணம் விஸ்வாசம் படத்தில் இருந்து தொடங்குகிறது என குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் விஸ்வாசம் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது. பிரீமியர் காட்சிகள் 9-ம் தேதி வெளியாக உள்ளது எனவும் குறிப்பிட்டு டீவீட்டியுள்ளது.