Viswasam Release Info

Viswasam Release Info : விஸ்வாசம் படத்திற்கு சரியான ரிலீஸ் தேதி இது தான் என பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

பொங்கல் ரிலீஸ் என்பதால் இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகுமா? அல்லது 15-ம் தேதி வெளியாகுமா? என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

ஆனால் படக்குழுவினர் படத்தை 10-ம் தேதி வெளியிடவே திட்டமிட்டு வருவதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான வெற்றி தியேட்டர் உரிமையாளர் ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் ரிலீஸுக்கு ஜனவரி 11 தான் சரியான ரிலீஸ் தேதி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனவரி 10-ம் தேதி இந்த படம் வெளியானால் தான் 16-ம் தேதி வரை நல்ல வசூல் பார்க்க முடியும். ஜனவரி 11 முதல் 16 வரை விஸ்வாசம் படத்திற்கு கோல்டன் பாக்ஸ் ஆபீஸ் தான் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.